mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / சென்னை ஐஐடிக்கு சிறப்பு அந்தஸ்து!

சென்னை ஐஐடிக்கு சிறப்பு அந்தஸ்து!

August 3, 2019 12:34 pm

சென்னை ஐஐடிக்கு (இந்திய தொழில்நுட்பக் கழகம்) சிறப்பு அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து பெற்ற 20 கல்வி நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பல்கலைக்கழக மானிய ஆணையம் (ஆகஸ்ட் 2) வெளியிட்டது. அதில் மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி, பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் போன்ற அரசு கல்வி நிறுவனங்களும், பிட்ஸ் பிலானி, மணிபால் அகாடமி, ஜியோ இன்ஸ்டிடியூட் போன்ற தனியார் கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், சென்னை ஐஐடி, கரக்பூர் ஐஐடி, ஹைதராபாத் பல்கலைக்கழகம், அமிர்தா விஸ்வா வித்யபீடம், வேலூர் விஐடி, ஜமியா ஹம்தார்த் பல்கலைக்கழகம், ஓபி ஜிண்டால் பல்கலைக்கழகம், சிவ நாடார் பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், தெஸ்பூர் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்று பல்கலைக்கழக மானிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மாநில அரசுடன் ஆலோசித்தபிறகு சிறப்பு அந்தஸ்து குறித்து பரிசீலிக்க வேண்டுமென்று பல்கலைக்கழக மானிய ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை கே.ஆர்.இ.ஏ, அசோகா பல்கலைக்கழகம், அசி பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

About CmsnewsAdmin@123

Check Also

ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது: பொன்.மாணிக்கவேல்

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற ஐஜி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *