mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / சென்னை: இரவில் ஒளிர்ந்த கடல்!

சென்னை: இரவில் ஒளிர்ந்த கடல்!

August 20, 2019 12:30 pm

சென்னையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு திடீரெனக் கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்ததால், நள்ளிரவென்றும் பாராமல் பெரும்பாலான பொதுமக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாதாரண நாட்களை விடவும் கடற்கரைகளில் மக்கள்கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இரவானதும் கடலலைகள் நீலநிறத்தில் நிறம் மாறிக் காட்சி அளித்தன. சென்னையில் திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்தில் ஒளிர்வதாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனையடுத்து அந்த அதிசயக் காட்சியைக் காண பெரும்பாலான மக்கள் வந்துசென்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்த விஞ்ஞானிகள், இது போன்ற நிகழ்வுகள் கடல்களில் சில சமயம் நடக்கலாம் என்று கூறினர். கடல் அலைகள் நீல நிறமாகக் காட்சியளித்ததற்கு உயிர் ஒளிர்வு என்று பெயர். டயனோப்ளாஜலேட்ஸ் என்ற ஒருவகைப் பாசிகளே இந்த நீல நிறத்திற்கு காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சிறுமீன்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் அத்தகைய பாசிகள், நீலநிற வண்ணத்தை வெளியிடும். அந்த நேரத்தில் ஏற்படும் ஒளி வெள்ளத்தால், பெரிய மீன்கள் சிறிய மீன்களை எளிதில் அடையாளம் கண்டு உணவாக்கிக் கொள்ளும் என்றும் தெரிவிக்கின்றனர். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடற்கரைப் பகுதியில் இந்த அரிய நிகழ்வு நேற்று காணப்பட்ட நிலையில், பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *