mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / சென்னையில் 107 இன்ஸ்பெக்டர்கள் ஒரே நாளில் இடமாற்றம்!

சென்னையில் 107 இன்ஸ்பெக்டர்கள் ஒரே நாளில் இடமாற்றம்!

July 29, 2019 12:17 pm

சென்னை மாநகரத்தில் 107 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ஒரே இடத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நிர்வாக வசதிக்காக இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையில் தற்போது 107 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று (ஜூலை 28) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அம்பத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய வேலுமணி பெரவள்ளூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரவள்ளூர் இன்ஸ்பெக்டராக இருந்த சிட்டிபாபு மாங்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். அமைந்தகரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய வசந்தன், செங்குன்றம் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். காசிமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் கொளத்தூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி புளியந்தோப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் அண்ணா நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புழல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன் திருவான்மியூர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். செங்குன்றம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் திருவான்மியூர் சட்டம் ஒழுங்குக்கு மாற்றப்பட்டுள்ளார். மாதவரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜவஹர், செங்குன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். வேப்பேரி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி கீழ்பாக்கம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கண்ணகி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி மாம்பலம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எழும்பூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த கருணாகரன் ஐஸ்ஹவுஸ் சட்டம் ஒழுங்குக்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த கண்ணன் அபிராமபுரம் சட்டம் ஒழுங்குக்கும், அபிராமபுரம் சட்டம் ஒழுங்கில் இருந்த அஜூ குமார் கோட்டூர்புரம் சட்டம் ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன் வடபழனி சட்டம் ஒழுங்குக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய குற்றப்பிரிவில் இருந்த சேட்டு எழும்பூர் சட்டம் ஒழுங்குக்கும், பழவந்தாங்கல் குற்றப்பிரிவில் இருந்த ராஜசேகரன் ஆயிரம்விளக்கு சட்டம் ஒழுங்குக்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த ஆனந்த பாபு சூளைமேடு சட்டம் ஒழுங்குக்கும், கோடம்பாக்கம் சட்டம் ஒழுங்கில் இருந்த கிருஷ்ணன் அசோக் நகர் குற்றப்பிரிவுக்கும், தி.நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் இருந்த ராஜிவ் பிரின்ஸ் அரோன், வேளச்சேரி சட்டம் ஒழுங்குக்கும், மாம்பலம் சட்டம் ஒழுங்கிலிருந்த விவேகானந்தன், பீர்க்கங்கரணை குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல, ஜாம்பஜார் சட்டம் ஒழுங்கில் இருந்த சண்முகசுந்தரம் அபிராமபுரம் குற்றப்பிரிவுக்கும், கோடம்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த ஜோதிலட்சுமி ஐஸ்ஹவுஸ் குற்றப்பிரிவுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இன்ஸ்பெக்டர்களாக இருந்து டிஎஸ்பிகளாக பதவிஉயர்வு பெற்ற 18 பேர் புதிய பதவி ஒதுக்கும் வரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாகப் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மெகா இடமாற்றத்தில் க்ரைம் பிராஞ்ச்சில் இருந்து சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கு பல இன்ஸ்பெக்டர்கள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

About CmsnewsAdmin@123

Check Also

ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது: பொன்.மாணிக்கவேல்

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற ஐஜி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *