mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / சுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்

சுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்

புதுடில்லி: சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூர் இன்று கோர்டில் ஆஜராகிறார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் சசிதரூர்,.இவரது காதல் மனைவி சுனந்தா புஷ்கர். .கடந்த 2014 ல் டில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தார். இவர் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சர்ச்சை கிளம்பியது. இந்த வழக்கில் மாஜி மத்திய அமைச்சர் சசிதரூரிடம் விசாரணை நடந்துள்ளது. அவர் கைதாகலாம் என்ற நிலையில் போலீசார் தன்னை கைது செய்யக்கூடாது என டில்லி கோர்ட்டில் சசிதரூர் தரப்பில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். டில்லி கோர்ட் முன்ஜாமின் வழங்கியுள்ளது. சசிதரூர் டில்லி போலீசில் இன்று (7 ம் தேதி) ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து சசிதரூர் இன்று கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.