mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / சிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

சிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

தென் கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் மாயி சாய் நகரின், கால் பந்தாட்ட அணியைச் சேர்ந்த, 11 – 16 வயதுடைய சிறுவர்கள், 11 பேர் மற்றும் 25 வயதுடைய பயிற்சியாளர் ஆகியோர், கடந்த மாதம், 23ல், அப்பகுதியில் உள்ள, தாம் லுயாங் குகைக்கு சென்றனர். குகைக்குள் சற்று துாரம் சென்றதும், பலத்த மழை காரணமாக, மழை நீர், குகையை சூழ்ந்ததால், அவர்களால், பல நாட்கள் ஆகியும் வெளியேற முடியவில்லை. தாய்லாந்து ராணுவத்துடன் சேர்ந்து, அமெரிக்க வீரர்களும், சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிறுவர்கள், 11 பேரும், தாங்கள் நலமாக இருப்பதாக கூறும், வீடியோ வெளியானது. அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதற்காக, பேரிடர் மீட்பு நிபுணர் குழுவினர், பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

இதனிடையே, அந்த பகுதியில் பலத்த மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து சிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மீட்பு பணி நடக்காது என மாகாண கவர்னர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர், சிறுவர்கள் குகையில் சரியான இடத்தில் தான் தங்கியுள்ளனர். சிறுவர்கள் அங்கு எழுந்து நடக்கின்றனர். விளையாடுகின்றனர். அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் சூழ்நிலை சரியில்லை. சிறுவர்களை மீட்க தொடர்ந்து முயற்சி செய்வோம் எனக்கூறினார்.