mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / சிதம்பரத்துக்குத் தொடரும் சிக்கல்!

சிதம்பரத்துக்குத் தொடரும் சிக்கல்!

October 11, 2019 1:28 pm

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தை அமலாக்கத் துறை அணுகியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், அவர் மகனும் சிவகங்கை எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தரப்பிலிருந்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவிட்டார். மேலும் ரூ.1 லட்சத்தைப் பிணைத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும், விசாரணைக்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை (அக்டோபர் 10) மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், “விசாரணையின்போது இருவரும் மழுப்பலான பதில்களையே தந்துள்ளனர். மேலும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்கவும் வாய்ப்புள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பது ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்குவதற்காக சட்டபூர்வ தளம் கிடையாது. எனவே இருவரையும் கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கெயிட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு வரும் 15ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் மற்றொரு வழக்கான ஏர்செல் – மேக்சிஸிலும் சிதம்பரத்தின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோருகிறது அமலாக்கத் துறை. ஒருவேளை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டாலும், ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டுவிட்டால் சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்படும் சூழலும் உருவாகும். இதனால் சிதம்பரத்துக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *