mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / சாலையோரக் கடைகளிலும் தரமான உணவு: செஃப் தாமு!

சாலையோரக் கடைகளிலும் தரமான உணவு: செஃப் தாமு!

August 13, 2019 1:36 pm

செஃப் என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் தாமு. விதவிதமான உணவு வகைகளை விறுவிறுவென சமைப்பதில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே. சமையல் மீதான அளவுகடந்த காதலால், ஒரே நாளில் இடைவெளி இல்லாமல் 617 உணவு வகைகளைச் சமைத்து, கின்னஸ் உலக சாதனையைப் படைத்தவர் செஃப் தாமு. இப்போது இவர், செளத் இந்தியா செஃப்ஸ் அசோஸியேஷன் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டபின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய செஃப் தாமு, “தரமான உணவுகள் எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும். சாலையோரங்களில் இயங்கும் கடைகளிலும் தரமான உணவைத் தர முடியும். அந்தக் கடைகளின் விற்பனையாளர்களை அழைத்துக் கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் போதும். தரமான உணவுகள் அனைவருக்கும் கிடைக்கும். அதற்கான செயலில் இந்தச் சங்கத்தின் மூலமாக இறங்கப் போகிறோம். அவர்களை ஒன்று திரட்டி இலவசப் பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தயாரித்துள்ளோம். இதற்கு அரசாங்க ஆதரவும் தேவை. அதற்காக முதல்வரைச் சந்திக்க உள்ளோம்” என்றார்.

மேலும், “பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு இப்போது மக்களிடம் அதிகரித்து வருகிறது. இது வரவேற்க வேண்டியது. இதை ஊக்கப்படுத்தும் விதத்தில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தவுள்ளோம். அத்துடன் சமையற்கலையில் நிபுணத்துவம் பெறும் வகையில் கேட்டரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்க உள்ளோம். சமையற்கலை படிக்க ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு உதவ இருக்கிறோம்” என்றார். 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1,500 உறுப்பினர்களைக் கொண்ட செளத் இந்தியா செஃப்ஸ் அசோஸியேஷனில் டாக்டர் செஃப் தாமு மூன்று ஆண்டுகள் தலைவர் பொறுப்பில் இருப்பார்.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *