mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / ஆன்மீகம் / சபரிமலையில் 4 திருநங்கைகள் சாமி தரிசனம்…

சபரிமலையில் 4 திருநங்கைகள் சாமி தரிசனம்…

December 18, 2018 1:57 pm

திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்துள்ளது. அங்கு சென்ற 2 பெண்கள் மீது பக்தர்கள் தாக்குதல் நடத்த முயன்றனர். போராட்டத்திலு இறங்கினர். இதனால் இதுவரை இளம்பெண்கள் யாரும் சபரிமலை செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி சபரிமலைக்கு எரிமேலி வழியாக அனன்யா, திருப்தி, ரெஞ்சுமோள், அவந்திகா ஆகிய 4 திருநங்கைகள் கருப்புச் சேலை அணிந்து தலையில் இருமுடி கட்டுடன் சாமி தரிசனத்துக்காக சென்று கொண்டிருந்தனர். இவர்களை இளம்பெண்கள் என்று நினைத்து ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திருநங்கைகளை திருப்பி அனுப்பினர். இதைத்தொடர்ந்து திருநங்கைகள் 4 பேரும் கேரள போலீஸ் ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாமை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் தங்களை சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். அதேபோல சபரிமலை நிலவரத்தை ஆய்வு செய்ய கேரள ஐகோர்ட்டு நியமித்த குழுவைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி. ஹேமச்சந்திரனிடமும் இந்த திருநங்கைகள் மனு கொடுத்தனர்.

திருநங்கைகள் சபரிமலையில் செல்ல கோர்ட்டு தடை எதுவும் இல்லாததால் அவர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சட்ட வல்லுனர்களும் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த திருநங்கைகள் 4 பேரும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய போலீசார் அனுமதி வழங்கினர்.

இன்று காலை 8 மணிக்கு திருநங்கைகள் 4 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்கு சென்றனர். கருப்பு சேலை அணிந்து, தலையில் இருமுடி கட்டுடன் சென்ற அவர்கள் 18-ம் படி வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். நெய் அபிஷேகமும் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் பகல் 11.30 மணி அளவில் அவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி வந்தனர். இதுபற்றி திருநங்கைகள் கூறுகையில் திருநங்கைகளாக பிறந்த எங்களுக்கு இன்று சபரிமலையில் தரிசனம் செய்ததன் மூலம் விமோசனம் கிடைத்துள்ளது என்றனர்.

About CmsnewsAdmin@123

Check Also

லண்டனில் நீரவ் மோடி கைது

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *