mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / சக மாணவரை பட்டாக்கத்தியால் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர்!

சக மாணவரை பட்டாக்கத்தியால் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர்!

October 11, 2019 1:29 pm

சென்னை பல்லாவரம் அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் சக மாணவரைப் பட்டாக்கத்தியால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகரப் பேருந்தில் பட்டாக்கத்தியுடன் வன்முறையில் ஈடுபட்டது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று தனியார் சட்டக் கல்லூரி மாணவர் சக மாணவரைக் கல்லூரிக்கு வெளியில் வைத்து சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். மேடவாக்கத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பயின்று வருகிறார். அவருடன் கடலூரைச் சேர்ந்த அஸ்வின் என்பவரும் பயின்று வருகிறார். கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் (அக்டோபர் 10) கல்லூரி வளாகம் வெளியே இரு மாணவர்களுக்கும் மத்தியில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபமடைந்த கார்த்தி, தான் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து அஸ்வினைத் தாக்கியுள்ளார். தலை, கை கால் என உடம்பில் பல இடங்களிலும் வெட்டியுள்ளார். இதைக் கண்ட அருகிலிருந்த மாணவர்கள் கார்த்தியை உடனடியாக தடுத்து அழைத்துச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த அஸ்வின் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையே கார்த்தி தலைமறைவாகியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மாணவரைத் தேடி வருகின்றனர். சட்டம் படிக்கும் மாணவர்களே இப்படி பட்டாக்கத்தியுடன் தாக்கிக்கொள்ளும் சம்பவம் பொதுமக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *