mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / ‘சகோ சாங்’ புதுமை: ஏ.ஆர்.ரஹ்மான்!

‘சகோ சாங்’ புதுமை: ஏ.ஆர்.ரஹ்மான்!

June 21, 2019 11:14 am


இசையமைப்பாளர்
.ஆர்.ரஹ்மான், சில நாட்களுக்கு முன்னர் இரண்டு விநாடிகள் மட்டும் அமையும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அந்த வீடியோவில் இருப்பது யார் எனக் கண்டுபிடிக்க முடியுமா என ரசிகர்களிடம் கேட்டிருந்தார். அந்த வீடியோவும் அதில் இருந்தது .ஆர்.ரஹ்மான் அவர்களின் மகன் என்னும் தகவலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

தற்போதுசோனி மியூசிக் சௌத்தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பாடலின் புரொமோ வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. செவன் அப் மெட்ராஸ் கிக் சீசன் 2வுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு .ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்தப் பாடலை அவரது மகன் .ஆர்.அமீன் பாடியுள்ளார் என்பதுதான். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அமைந்த இந்தப் பாடல்சகோ சாங்என்று பெயரிடப்பட்டுள்ளது.

முன்னதாக அமீன், மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி திரைப்படத்திலும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மௌலா வா சலிம்என்ற அந்தப் பாடலைப் பலரும் பாராட்டி இருந்தனர். மழலைக் குரலில் இருந்த அந்தப் பாடலைக் கேட்டு ரசித்திருந்தவர்களுக்குசகோ சாங்புதுமையாகத் தெரிகிறது. 42 விநாடிகள் அமையும் இந்தப் பாடலிலே அமீனின் திறமை தெரிகிறது.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *