mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / கோட்சே வெறும் கருவிதான்: சூர்யா!

கோட்சே வெறும் கருவிதான்: சூர்யா!

September 17, 2019 1:07 pm

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் பட விழாவில், கோட்சே குறித்து சூர்யா கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து சூர்யா – கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் காப்பான். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். மேலும் ஆர்யா, சாயிஷா, பூர்ணா, பொமன் இரானி, சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து காப்பானில் நடித்திருக்கிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை(செப்டம்பர் 14) நடைபெற்ற காப்பான் திரைப்பட விழாவில் நடிகர் சூர்யா கோட்சே குறித்து கருத்துக் கூறியது சர்ச்சையாகியுள்ளது. கோட்சே குறித்து சூர்யா கூறியதாவது, “கோட்சே காந்தியை சுட்ட பின்னர் பெரும் வன்முறை வெடித்தது. அப்போது எல்லோரும் வன்முறையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது கோட்சேவின் அந்த துப்பாக்கியை எடுத்து சுக்குநூறாக உடைத்துவிடுங்கள் என பெரியார் சொன்னார். அப்போது, ‘அய்யா நாங்கள் கோட்சேவை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் அவருடைய துப்பாக்கியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்’ என அருகில் உள்ளவர்கள் கேட்டுள்ளார்கள். அதற்கு பதிலளித்த பெரியார், ‘கோட்சே வெறும் துப்பாக்கி தான்’ எனச் சாதாரணமாக சொன்னார்” என்று இந்த விழாவில் சூர்யா பேசினார். மேலும் ஒவ்வொரு நிகழ்வின் பின்னும் ஒரு சித்தாந்தம் இருப்பதாக காந்தி கொலை மூலம் தந்தை பெரியார் சுட்டிக்காட்டிருப்பதாக சூர்யா தெரிவித்தார்.

அண்மைக் காலமாக சூர்யா, நீட் விவகாரம், இந்தி திணிப்பு, சகிப்பு தன்மை, கல்வி அமைப்பு, கருத்து சுதந்திரம் என பல்வேறு விவகாரங்களில் தனது கருத்துக்களை வெளிப்படையாகக் தெரிவித்து வருகின்றார். சில நாட்களுக்கு முன் புதிய தேசிய கல்வி கொள்கை பற்றி அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம். சில மாதங்களுக்கு முன் அரவக்குறிச்சி தொகுதியில், நடைபெற்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் கோட்சே குறித்த கருத்து அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனை பலவழிகளில் பின்பற்றும் சூர்யா தற்போது கோட்சே குறித்து கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *