mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / கெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை

கெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை

புதுடில்லி: மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
டில்லியில் யாருக்கு அதிகாரம் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் டில்லியில் கெஜ்ரிவால் அரசுக்கு சர்வ அதிகாரம் உள்ளது என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இது குறித்து சிவசேனாக் கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’ வில் கூறியுள்ளதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் இடையேயான பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட்டு, தீர்த்து வைத்திருக்க முடியும் ஆனால் அந்த வேலையை உச்ச நீதிமன்றம் செய்துவிட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆலோசனை கூறுபவராக துணை நிலை கவர்னர் இருக்கலாம், ஆனால், இடையூறு செய்பவராக இருக்கக் கூடாது துணை நிலை கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்க முடியாது. அதன் விருப்பம் போல் செயல்பட வேண்டும் இதன் பிறகாவது டில்லி அரசுக்கும் துணை நிலை கவர்னருக்கும் இடையே அதிகாரப்போர் முடியும் என நம்புகிறோம்
தேசிய அரசியலை பொருத்தவரையில், இது டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் , பிரதமருக்கும் இடையே நடந்த அதிகாரப்போராகவே பார்க்கிறோம். கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து கெஜ்ரிவால் அரசை செயல்பட மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.