mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மோடி வேண்டுகோள் : டிரம்ப்

காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மோடி வேண்டுகோள் : டிரம்ப்

July 23, 2019 11:57 am

இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு இந்திய பிரதமர் மோடி என்னிடம் வேண்டுகோள் வைத்தார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சென்றிருக்கிறார். அவரை வெள்ளை மாளிகையில் வரவேற்கும்போது பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் பிரச்சினை என்பது நீண்ட காலமாக இருக்கிறது. இந்தியா எங்களது நெருங்கிய நட்பு நாடு.

இருவாரங்களுக்கு முன் ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் நானும் பேசிக் கொண்டிருந்தபோது காஷ்மீர் பிரச்சினை பற்றியும் பேச்சு வந்தது. அப்போது, மோடி என்னிடம், ‘நீங்கள் இந்த பிரச்சினையை மீடியேட்டராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? நடுவராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார். நான் இரு நாடுகளுக்கும் இடையிலான மீடியேட்டராகவே இருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறேன்” என்று பேசியிருந்தார் டிரம்ப். இந்தக் கருத்து இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உடனடியாக (ஜூலை 22) டெல்லியில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், “பிரதமர் மோடி சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக வேண்டுகோள் எதுவும் வைக்கப்படவில்லை. மேலும் காஷ்மீர் பிரச்சினை இரு நாடுகளின் பிரச்சினை. இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தரப்புப் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு. எல்லையில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தையும் நடக்கும். எனவே காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நபரின் தலையீடு தேவையற்றது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு” என்று டிரம்ப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

About CmsnewsAdmin@123

Check Also

டிரம்ப் பதவிக்காலம் கேள்விக்குறி!

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரதிநிதிகள் சபை பதிவு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *