mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / காஷ்மீரில் நிலவி வரும் நிலைமைகள்: பிபிசி விளக்கம்!

காஷ்மீரில் நிலவி வரும் நிலைமைகள்: பிபிசி விளக்கம்!

August 12, 2019 11:06 am

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் நிலைமைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் பிபிசி, கார்டியன் உள்ளிட்டவை செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து காஷ்மீர் முழுக்க முழுக்க இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இணைய இணைப்புகள் தொலைபேசி இணைப்புகள் காஷ்மீருக்குள் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியில் யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய அரசின் முடிவை எதிர்த்து காஷ்மீர் இளைஞர்கள் வீதிகளில் திரண்டு போராடி வருவதாக பிபிசி ஒரு வீடியோவை வெளியிட்டது.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதைத் தொடர்ந்து பிபிசி ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கத்தை நேற்று வெளியிட்டுள்ளது. “பிபிசி தனது இதழியலில் உறுதியாக இருக்கிறது. காஷ்மீர் பற்றி நாங்கள் தவறான செய்திகளை அளிக்கிறோம் என்ற கூற்றுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை பாகுபாடு எதுவும் இன்றியும் துல்லியமாகவும் வழங்கி வருகிறோம். மற்ற ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு இருக்கும் அதே தடைகள் வரம்புகள் எங்களுக்கும் காஷ்மீரில் இருக்கின்றன.ஆனால் காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து நாங்கள் செய்திகளாக பதிவு செய்வோம்” என்று பிபிசி விளக்கம் அளித்துள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *