mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / ஆன்மீகம் / காவிரி மேலாண் ஆணையம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம்: கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரி மேலாண் ஆணையம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம்: கர்நாடக முதல்வர் குமாரசாமி

June 18, 2018 1:54 pm

புதுடெல்லி:

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்பட உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இம்மாதத் தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டன.

ஆனால், கர்நாடகத்தின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக்கும் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கர்நாடகம் அதன் உறுப்பினர்களின் பெயர்களை ஜூன் 12-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்த நிலையில், அதை கர்நாடகம் மதிக்கவில்லை.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமலேயே காவிரி ஆணைய அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சட்டம் 1956 இன் படி நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்றார்.

காவிரி மேலாண் ஆணையம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம்: கர்நாடக முதல்வர் குமாரசாமி

About CmsnewsAdmin@123

Check Also

ராஜஸ்தானில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு

புதுடெல்லி: ராஜஸ்தான் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அசோக் கெலாட், துணை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *