mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / காவல்துறையினர் போராட்டம் வாபஸ்!

காவல்துறையினர் போராட்டம் வாபஸ்!

November 6, 2019 2:20 pm

தலைநகரை உலுக்கிய போலீசாரின் 11 மணி நேரப் போராட்டம் உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் (நவம்பர் 5) மாலைக்குப் பின் முடிவுக்கு வந்தது. கடந்த சனிக்கிழமை, டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் வெடித்தது. இந்தச் சம்பவம் மிகப்பெரிய கலவரமாக மூண்டது. அதில், 20 போலீசாருக்கும் சில வழக்கறிஞர்களுக்கும் காயம் ஏற்பட்டது. காயம்பட்ட வழக்கறிஞர்களும் காவல் துறையினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் (நவம்பர் 5) காவலர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களுடனான மோதல் விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி டெல்லி காவல் துறை தலைமை அலுவலகத்துக்கு வெளியே சீருடையுடன் போலீசார் வரலாறு காணாத போராட்டத்தைத் தொடங்கினர். போலீசார் இந்தப் போராட்டத்தின்போது, முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்; காயமடைந்த போலீஸ் அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; வக்கீல்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை; இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு; கீழமை அளவிலுள்ள போலீசாருக்கும் சங்கம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மற்றும் பிகார் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்தது. ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடியும் காவலர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர், உயர் போலீஸ் அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் 11 மணி நேரம் நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மூத்த அதிகாரிகளும் காவலர்களின் கோரிக்கைகளை ஆராய்வதாக உறுதியளித்தனர். காவல் துறையினர் மீதான தாக்குதலும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும், கலவரத்தில் காயம் அடைந்த காவல் துறையினருக்கு ரூ.25,000 இழப்பீடு அளிக்கப்படும் என்று காவல் துறை சிறப்பு அதிகாரி சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து காவல் துறையினர் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *