mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / சென்னை / காமன்வெல்த் தங்கத்தை தமிழகத்துக்கு அர்ப்பணிக்கிறேன்: தங்கம் வென்ற மாணவி பேட்டி

காமன்வெல்த் தங்கத்தை தமிழகத்துக்கு அர்ப்பணிக்கிறேன்: தங்கம் வென்ற மாணவி பேட்டி

November 27, 2018 2:07 pm

சென்னை:

காமன்வெல்த் வாள் சண்டை போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் சமீபத்தில் நடந்தது இதன் சீனியர் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற சென்னை வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் இங்கிலாந்து வீராங்கனை எமிராக்சை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

இதன்மூலம் காமன் வெல்த் வாள் சண்டையில் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானி தேவி படைத்தார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்த அவர் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பவானி தேவிக்கு பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகள் பெருமளவில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சர்வதேச போட்டிகளில் இது எனக்கு முதல் தங்கப்பதக்கம் ஆகும். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவுக்கே ஒருவர் வெல்லும் முதல் தங்கப்பதக்கம் ஆகும். அந்த சாதனையும் எனக்கு கிடைத்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்த தங்கப் பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும், வெளிநாடுகளில் பயிற்சி பெறவும் உதவிகரமாக உள்ளது. இதற்கு தமிழக அரசு பெரிதும் உதவி வருகிறது.

தமிழக முதல்-வருக்கும், விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காமன்வெல்த் தங்கப் பதக்கம், அடுத்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்க எனக்கு பெரிதும் ஊக்குவிப்பாக உள்ளது. எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு பவானிதேவி கூறினார்.

About CmsnewsAdmin@123

Check Also

காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மோடி வேண்டுகோள் : டிரம்ப்

இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு இந்திய பிரதமர் மோடி என்னிடம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *