mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / காங்கிரஸ் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காங்கிரஸ் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

March 14, 2019 1:59 pm

மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் 2வது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் கட்சி கடந்த 7ம் தேதி வெளியிட்டது. அதில் 15 வேட்பாளர்களின் பட்டியல் இடம் பெற்றிருந்தது. முதல் பட்டியலில் உ.பி.யில் போட்டியிடும் 11 வேட்பாளர்களும், குஜராத்தில் 4 வேட்பாளர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் 2வது பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.  உ.பி.யில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பெயர்களும், மகாராஷ்டிராவில் போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர்களும் இதில் இடம் பெற்றிருந்தது. உ.பி காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர்  மொரதாபாத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் வடக்கு-மத்திய மும்பையில் பிரியா தத், நாக்பூர் நானா படோல், சோலாப்பூரில் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

About CmsnewsAdmin@123

Check Also

லண்டனில் நீரவ் மோடி கைது

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *