mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / கவுதமன் தமிழ்ப் பேரரசு கட்சி தொடங்கினார்

கவுதமன் தமிழ்ப் பேரரசு கட்சி தொடங்கினார்

February 26, 2019 10:33 am

 

தமிழ் இனம், மொழி, வளம் காக்க ‘தமிழ்ப் பேரரசு கட்சி’ என்ற புதிய கட்சியை திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் தொடங்கியுள்ளார்.அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்களின் கலை, கலாச்சாரம், இயற்கை வளம், மொழி, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உரிமைகள் உட்பட பல்வேறு அரசியல் உரிமைகளுக்காக போராட்டக் களங்களில் சமரசமின்றி போராடி வரும் நாங்கள், அதைவிட மிகப் பரந்த அரசியல் களத்திலும் எங்கள் போராட்டத்தை விரிவாக்க முடிவு செய்திருக்கிறோம். அதன்படி, ‘தமிழ்ப் பேரரசு கட்சி’ என்கிற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளோம்.வரும் மக்களவைத் தேர்தல் குறித்த எங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவையும், தென்கிழக்கு ஆசியாவையும் அரசாண்ட நமது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பெரும் வரலாற்றை நினைவுபடுத்துகின்ற தலைநிமிர்வு அடையாளமாகவே ‘தமிழ்ப் பேரரசு கட்சி’ என பெருமையோடு பெயர் சூட்டியுள்ளோம்.தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் தமிழ்ப் பேரரசுக் கனவையும் நாங்கள் நெஞ்சில் ஏந்துகிறோம்.சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களான வில், புலி, மீனை மைய இலச்சினையாகவும், புரட்சியைக் குறிக்கும் சிவப்பு வீரத்தைக் குறிக்கும் மஞ்சள், பசுமையைக் குறிக்கும் பச்சை, கடலையும்,வானத்தையும் குறிக்கும் நீல வட்டங்களை கொள்கையின் அடையாளங்களாகவும் கொண்டு புதிய கொடியை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளோம்.தமிழ் இனம் காக்க, தமிழ் மொழி காக்க, தமிழர் வளம் காக்க, உலகத் தமிழர்களின் பேராதரவோடு உறுதியான எங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

லண்டனில் நீரவ் மோடி கைது

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *