mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / கல்விக் கொள்கை குறித்து சூர்யாவுக்கு என்ன தெரியும்? அமைச்சர்

கல்விக் கொள்கை குறித்து சூர்யாவுக்கு என்ன தெரியும்? அமைச்சர்

July 16, 2019 11:00 am

கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் அகரம் பவுண்டேஷன் சார்பாக ஜூலை 13ஆம் தேதி நடந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கை வரைவில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், “அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன்?” என்று கேள்வியெழுப்பி நீட் தேர்வையும் விமர்சித்திருந்தார். ஆனால், இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, சூர்யாவையும் விமர்சித்தனர். இந்த நிலையில் (ஜூலை 15) நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு, “கல்விக் கொள்கை குறித்து சூர்யாவுக்கு என்ன தெரியும்? எதைத் தெரிந்துகொண்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்குப் பதில் சொல்லலாம். ஆனால், எதையுமே தெரிந்துகொள்ளாமல் அரைவேக்காட்டுதனமாகப் பேசுவோருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று காட்டமாகப் பதிலளித்தார் கடம்பூர் ராஜு.

அதே சமயம் சூர்யாவுக்கு ஆதரவாகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து நடிகர் சூர்யா பேசியதை நான் வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “சூர்யா பேசியது அவருடைய அடிப்படை உரிமை. இதில் அரசியலெல்லாம் நாம் பார்க்கக் கூடாது. நாங்கள் பல ஆண்டுகளாகப் பேசிவந்த கருத்தைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். பெரிய பெரிய நடிகர்களெல்லாம் கருத்து தெரிவிக்க பயந்துகொண்டு இருக்கும்போது சூர்யா பேசுவது குறித்து பெருமையும் மகிழ்ச்சியும்தான் அடைய வேண்டும். மானுட உரிமையான கல்வியைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. சூர்யாவின் கேள்வியில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *