mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தகுதிநீக்கம்!

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தகுதிநீக்கம்!

July 26, 2019 12:27 pm

கர்நாடக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துள்ளது. அடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோருவது குறித்து பாஜக தரப்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (ஜூலை 25) கர்நாடக அரசியல் விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கர்நாடக பாஜக தலைவர்கள் ஜெகதிஷ் ஷெத்தார், பசவராஜ் பொம்மை, விஜயேந்திரா உள்ளிட்டோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், ஏற்கெனவே ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் குறித்து சபாநாயகர் முடிவெடுத்துள்ளார்.

இதையொட்டி நேற்று சபாநாயகர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் மீது உச்ச நீதிமன்றம் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் இனி என்னை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாது. அந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. சாதாரண தொழிலாளராக இருந்தாலும், நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமானதுதான்” என்று தெரிவித்தார். பாஜக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்தது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டபோது அவர், “அவர்கள் என்னைச் சந்தித்தனர். இன்று தேதி ஜூலை 25. வரும் 31ஆம் தேதிக்குள் நிதி மசோதாவைத் தாக்கல் செய்யவில்லை என்றால் அரசு முடங்கிவிடும். சம்பளம் வழங்குவதற்கான நிலையில்கூட நாங்கள் இருக்கமாட்டோம். அத்தகைய தேவை உருவாகியிருக்கிறது. என்ன செய்வது? யார் ஆட்சி அமைத்தாலும் புதிய அரசு உருவானதும் 48 மணி நேரத்தில் சட்டமன்றம் கூடி பணிகள் நடக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், ரேன்பென்னூர் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ ஆர்.சங்கர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜர்கிஹோலி, மகேஷ் குமதல்லி ஆகியோரும் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய சபாநாயகர், “சுயேச்சை எம்.எல்.ஏ ஆர்.சங்கர் கடந்த ஜூன் மாதம் காங்கிரஸில் இணைந்தார். அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ள ராஜினாமா கடிதத்தில் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜர்கிஹோலி, மகேஷ் குமதல்லி ஆகியோரின் ராஜினாமாவை முதலில் நான் நிராகரித்தேன். அவர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததாகக் கருதினேன். ஆனால் ஆதாரங்களை வைத்துப் பார்த்தபிறகு அவர்களைத் தகுதிநீக்கம் செய்திருக்கிறேன். எம்.எல்.ஏ.க்கள் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபிக்க என்னிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு இரண்டே வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று, உயர் நீதிமன்றத்தை நாடுவது. மற்றொன்று, உச்ச நீதிமன்றத்தை நாடுவது” என்று தெரிவித்தார். சபாநாயகரின் முடிவுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் வரவேற்பளித்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

டெல்லி கலவரத்தில் அதிகளவு துப்பாக்கிகள்!

டெல்லியில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடந்த கலவரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கைத்துப்பாக்கிகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *