mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

August 17, 2019 2:31 pm

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் எச்.எம்.எஸ் காலணி அருகே 39 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ”நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம். அவர் முதல்வர் ஆக வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் புரட்சித் தலைவர் மட்டும்தான். 1967ல் புரட்சித் தலைவர் குண்டடிபட்ட வால்போஸ்டர் தான் அப்போது அதிமுக வெற்றி பெற்றதற்குக் காரணம். கமலை நடிகராகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். முழு நேர அரசியலில் இருப்பேன் என்று தெரிவித்தார் தற்போது மீண்டும் சினிமாவுக்கு சென்றுவிட்டார். கமல் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்பதைக் கடந்த தேர்தல் முடிவுகள் காட்டியது” என்று தெரிவித்தார். வரும் 2021ல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 2021ல் மநீம கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கமல் சினிமாவில்தான் முதல்வராக முடியும் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *