mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை!

கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை!

August 16, 2019 1:57 pm

ஈரான் சரக்கு கப்பலில் சிறைபிடிக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 24 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 4ஆம் தேதி மத்திய தரைக் கடல் வழியில் சென்று கொண்டிருந்த ஈரானைச் சேர்ந்த எண்ணெய் கப்பல் கிரேஸ் – 1ஐ பிரிட்டிஷ் கடற்படை சிறை பிடித்தது. இந்த கப்பலில் பல்லாவரத்தைச் சேர்ந்த பால முருகன், திருச்செங்கோட்டைச் சேர்ந்த நவீன்குமார் உட்பட 24 இந்தியர்கள் பிரிட்டிஷ் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நுழைந்ததால் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்தது. இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசு பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்தியது. அதுபோன்று ஈரானும், பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து 24 பேரையும் விடுதலை செய்ய பிரிட்டிஷ் அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் முரளிதரன் உறுதிப்படுத்தியுள்ளார். கிரேஸ் 1 கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 24 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக ஈரான் கப்பலை விடுவிக்கக் கோரி அமெரிக்கா வலியுறுத்தியதாகவும், அதனைப் பிரிட்டிஷ் அரசு நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *