mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / ஏர் இந்தியா: எரிபொருள் தடை நீங்கியது!

ஏர் இந்தியா: எரிபொருள் தடை நீங்கியது!

September 9, 2019 10:42 am

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோகம் தொடர்பான தடையை, பேச்சுவார்த்தைக்குப் பின் எரிபொருள் நிறுவனங்கள் விலக்கிக் கொண்டுள்ளன. 1932 ஆம் ஆண்டு டாட்டா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின், இந்தியாவின் தேசிய விமானசேவை நிறுவனமாக மாறியது ஏர் இந்தியா. 1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு வைத்திருந்த 4500 கோடி ரூபாய் கடன் பாக்கியை செலுத்தவில்லை. இதனால் கடந்த ஆகஸ்டு 22ஆம் தேதி முதல் புனே,ராஞ்சி, பாட்னா, மொஹாலி, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு தேவைப்படும் எரிபொருள் விநியோகத்தை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் நிறுத்திக்கொண்டன. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக, எங்கு எரிபொருள் தடைவிதிக்கப்படாமல் இருக்கிறதோ, அந்த விமான நிலையங்களுக்குச் சென்று எரிபொருளை நிரப்பிய பின் விமான சேவை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஏர் இந்தியா விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த வாரம் எண்ணெய் நிறுவனத்துடன் ஏர் இந்தியா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், மாதம் தோறும் 100 கோடி ரூபாய் வீதம் செலுத்தி, 4,500 கோடி ரூபாய் கடனை அடைத்து விடுவதாக ஏர் இந்தியா வாக்களித்துள்ளது. அதனடிப்படையில், எரிபொருள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அதனால் செப்டமபர் 7ஆம் தேதி முதல் எரிபொருள் விநியோகம் தடைபட்ட 6 நகரங்களிலும் ஏர் இந்தியா விமானங்களுக்கு மீண்டும் எரிபொருள் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *