mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவடைகிறது.
தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கென 2,447, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 127, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 65 என மொத்தம் 2,639 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இது தவிர, அரசு ஒதுக்கீட்டுக்கு 862 எம்.பி.பி.எஸ். இடங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்தன. இது தவிர 516-க்கும் மேற்பட்ட நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 4,017 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
கடந்த 6 நாள்களாக…சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து 6 நாள்களாக நடைபெற்று வரும் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் 2,251 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டு மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது; தாழ்த்தப்பட்ட வகுப்பைச் (எஸ்.சி.) சேர்ந்த மாணவர்களுக்கு உரிய 124 எம்.பி.பி.எஸ். இடங்கள், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் (எஸ்சிஏ) பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய 50 எம்.பி.பி.எஸ். இடங்கள், பழங்குடி வகுப்பைச் (எஸ்.டி.) பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய 22 எம்.பி.பி.எஸ். இடங்கள் என அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 196 காலியிடங்கள் மட்டுமே உள்ளன.
எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர்…அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் இடங்கள், அரசு ஒதுக்கீட்டுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியின் பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றில் அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர் (பி.சி.எம்.), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.) என அனைத்தும் நிரம்பி விட்டன.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.), தாழ்த்தப்பட்ட அருந்ததி வகுப்பினர் (எஸ்.சி.ஏ.), பழங்குடி வகுப்பினர் (எஸ்.டி.) ஆகிய பிரிவினருக்கு மட்டுமே காலியிடங்கள் உள்ளன. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் 23 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் 13 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 164 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 16 பி.டி.எஸ். இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 641 அரசு ஒதக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு காலியிடங்களுக்கும் சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அரசு நீட் மையத்தில்…தமிழக அரசின் நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவர் டி.அலெக்ஸ் பாண்டியனுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியம் மா.புடையூரைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து பிளஸ் 2 தேர்வில் 1,111 மதிப்பெண்ணும் நீட் தேர்வில் 306 மதிப்பெண்ணும் பெற்றார். அவருக்கு திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது.