mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / சினிமா / என் விதி எழுதப்பட்டுவிட்டது’ தத்துவம் பேசும் ஹீரோயின்

என் விதி எழுதப்பட்டுவிட்டது’ தத்துவம் பேசும் ஹீரோயின்

March 14, 2019 2:14 pm

ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இணைய தளத்தில் பரபரப்பான தகவல்களையும், கவர்ச்சியான படங்களையும் வெளியிட்டுவரும் பூஜாவுக்கு பட வாய்ப்புகள்தான் எதிர்பார்த்தளவுக்கு வரவில்லை. திரையுலகுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் 8 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தற்போது இந்தியில் ‘ஹவுஸ்புல் 4ம் பாகம்’ மற்றும் தெலுங்கில் ஒரு படம் என 2 புதிய படங்களில் நடிக்கிறார். விரக்தியில் இருந்தாலும் தனது நிலை தனக்கு தெரியும் என்ற வகையில் தத்துவம் உதிர்த்திருக்கிறார் பூஜா ஹெக்டே. அவர் கூறும்போது,’விதி பற்றியோ மற்ற பெரிய விஷயங்கள் பற்றியோ எனக்கு தெரியாது. அதுபற்றி நீண்ட நேரம் என்னால் பேச முடியாது. ஒரு படத்தில் நடிப்பதற்காக கதாபாத்திரம் ஏற்கும்போது அந்த கதாபாத்திரம் என்னென்வெல் லாம் செய்ய வேண்டும் என்பதை இயக்குனர் முன்னதாகவே டிசைன் செய்துவிடு கிறார். அதைத்தான் திரையில் நம்பும்படியாக நாம் நடித்து காட்ட வேண்டும். இந்த உலகில் படைக்கப்பட்ட நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே விதி நிர்ணயித்திருக்கிறது. அதை செய்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு பெரிய வெற்றியோ, சிறிய வெற்றியோ அல்லது தோல்வியோ நம்மை பண்பானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் மாற்றுகிறது. அதிலிருந்து நாம் பாடம்கற்று நம்முடைய அடையாளத்தை தெரிந்துகொள்ள முடியும். எந்தவொரு வகையில் பார்த்தாலும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாகவே இருக்கிறேன் என நம்புகிறேன்’ என்று பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்

தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பை சித்தரிக்கும் படங்களை தயாரித்து நடிப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். அவர்களில் நடிகர்-தயாரிப்பாளர்-டைரக்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *