mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / உலகக் கோப்பை கிரிக்கெட் ஆஸி அதிரடி வெற்றி!

உலகக் கோப்பை கிரிக்கெட் ஆஸி அதிரடி வெற்றி!

June 21, 2019 11:11 am


உலகக்
கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டேவிட் வார்னரின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 26ஆவது ஆட்டத்தில் (ஜூன் 20) வங்கதேசத்தை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னரும் ஆரோன் பிஞ்ச்சும் முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்த நிலையில் பிஞ்ச் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த உஸ்மான் கவாஜா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். மறுபுறம் வாணவேடிக்கை காட்டிக்கொண்டிருந்த டேவிட் வார்னர் இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். கவாஜா 89 ரன்களும், மேக்ஸ்வெல் 32 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 147 பந்துகளில் 14 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 166 ரன்கள் எடுத்தார்.

வங்கதேச அணி கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (62 ரன்) நல்ல தொடக்கம் வழங்கினார். இவரது விக்கெட்டைத் தொடர்ந்து சௌமியா சர்க்கார் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற சகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் மீது கூடுதல் பொறுப்பு இருந்தது. 41 ரன்களுக்கு ஷகிப் ஆட்டமிழந்த பிறகு முஷ்பிகுர் ரஹிமுடன் மஹ்மதுல்லா ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடி களத்தில் இருந்தவரை வங்கதேச அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. மஹ்மதுல்லா 69 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியவுடன் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது.

பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தனி ஆளாக நின்று போராடிய முஷ்பிகுர் ரஹிமால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. வங்கதேச அணியால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதமடித்த முஷ்பிகுர் ரஹிம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணித் தரப்பில் மிட்செல் ஸ்டார்க், குல்டர் நைல் மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். சதமடித்து அணியின் ரன் குவிப்புக்கு உதவிய டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *