mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்!

உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்!

August 12, 2019 11:12 am

மேட்டூர் அணைக்கு அதிகளவில் நீர் வந்துகொண்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. காவிரி நீர் பிடிப்புகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கர்நாடகத்தின் அணைகள் நிரம்பி வழிகின்றன. அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருப்பதால் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இதனால் காவிரி பாசன விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் அணை முழுக் கொள்ளளவை எட்டிவிடும் என்பதால், உபரி நீர் வெளியேறி கடலில் கலப்பதைத் தவிர்க்க முன்கூட்டியே மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 11) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடகாவில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ண ராஜ சாகரம் மற்றும் கபினி அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் மேட்டூர் அணைக்கு இன்று இரவுக்குள் ஏறக்குறைய 1.50 லட்சம் கன அடி நீர் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது (ஆகஸ்ட் 12) மாலைக்குள் 2.50 லட்சம் கன அடியாக அதிகரிக்கலாம்” என்று எச்சரித்துள்ளது. மேலும், அதற்கேற்றார் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், காவிரிக் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.15 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் 10 அடி வரை உயர்ந்திருக்கிறது. மேலும் அணைக்கு நீர்வரத்து 1.05 லிருந்து 1.15 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீருக்காக வினாடிக்கு 1000 கன அடி மட்டும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கலில் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அங்கு வசிக்கும் மக்களுக்கு காவலர் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். தொடர்ந்து ஒகேனக்கலில் இருந்து மேட்டூர் வரையிலான காவிரி கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

About CmsnewsAdmin@123

Check Also

ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது: பொன்.மாணிக்கவேல்

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற ஐஜி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *