mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / உயரும் திருப்பதி விஐபி தரிசன கட்டணம்!

உயரும் திருப்பதி விஐபி தரிசன கட்டணம்!

September 7, 2019 11:46 am

திருப்பதி ஏழுமலையானை தரிப்பதற்கான விஐபி டிக்கெட் கட்டணம் ரூ.20,000 ஆக உயர்த்தப்பட இருப்பதாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிகமிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் தரிசிக்க 500 ரூபாய் கட்டணத்தில் எல்1, எல்2, எல்3 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. ஒரே கட்டணத்தில் பக்தர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அனுப்புவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனிடையே தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி, மூன்று வகையில் வழங்கப்படும் விஐபி தரிசன டிக்கெட்டுகளை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் விஐபி டிக்கெட் பெறுவதில் சில மாற்றத்தை ஏற்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி விஐபி டிக்கெட் விலையை ரூபாய் 20,000 ஆக உயர்த்தப்பட இருப்பதாகவும் இதற்கான அறிவிப்பு இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியாகும் என்றும் ஆந்திராவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஐபி டிக்கெட் விநியோகிப்பதற்காக தனி கவுண்டர் திறக்கப்படும் எனவும் 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி வருபவர்களை ஏழுமலையானுக்கு மிக அருகில் அதாவது குலசேகர ஆழ்வார்படி வரை அனுமதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விஐபி டிக்கெட் மாற்றத்தின் மூலம் இடைத்தரகர் முறை ஒழிக்கப்படும் என்றும் யாருடைய பரிந்துரையும் இன்றி விஐபி டிக்கெட் பெற முடியும் என்றும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதிலும் இருந்து ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோயிலை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் சமீபத்தில் ஏழுமலையான் கோயில் கட்டி திறக்கப்பட்டது. சென்னையிலும் மிகப்பெரிய கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கோயில்களை அமைத்த கோடிக்கணக்கான ரூபாய் தேவைப்படுவதால் நிதி திரட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய நிர்மான டிரஸ்ட் உருவாக்கப்பட்டது. இந்த டிரஸ்ட் மூலம் விஐபி டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. விஐபி டிக்கெட்டில் செல்லும் பக்தர்கள் மிக விரைவில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நாளொன்றுக்கு 200 முதல் 300 பக்தர்கள் ரூபாய் 20000 விஐபி டிக்கெட்டில் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *