mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / உணவு வியாபாரிகளுக்கு எச்சரிக்கை!

உணவு வியாபாரிகளுக்கு எச்சரிக்கை!

August 15, 2019 12:00 pm

செய்தித்தாள்களில் மடித்தோ, பிளாஸ்டிக் பைகளில் வைத்தோ உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் வியாபாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு உள்ள இடங்களில் அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருட்களைக் கைப்பற்றி வருவதோடு, அவற்றை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிளாஸ்டிக் பைகளில் உணவு, பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டுதான் வருகின்றன. குறிப்பாகச் சாலையோர தள்ளுவண்டிக் கடைகளிலும், சிறிய உணவகங்களிலும் பிளாஸ்டிக் பைகளில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

அதேபோல, வடை உள்ளிட்ட தின்பண்டங்கள் செய்தித்தாள்களில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006இன் கீழ் செய்தித்தாள் உள்ளிட்ட அச்சிடப்பட்ட காகிதங்களிலும், பிளாஸ்டிக் கவர்களிலும், ஸ்டேப்ளர் பின் பதிக்கப்பட்ட காகிதங்களிலும் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றிலுள்ள ரசாயனம் உள்ளிட்டவற்றால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் செய்தித்தாள், பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடை, போண்டா, பக்கோடா, பஜ்ஜி உள்ளிட்ட உணவுப் பொருட்களைச் செய்தித் தாள்களிலோ, பிளாஸ்டிக் கவர்களிலோ வைத்து விற்பனை செய்யும்போது அந்த உணவுகள் நஞ்சாகின்றன. அவற்றை உண்ணக் கூடாது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர வாரியத்தின் வலியுறுத்தலின்படி, அச்சு மையால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல, மறுசுழற்சி செய்யப்பட்ட செய்தித்தாள்களில் ஈயம், கேட்மியம் போன்ற ரசாயனங்கள் இருக்கும். சூடான உணவுப் பொருளைச் செய்தித்தாளில் வைக்கும்போது அதிலுள்ள மை உருகி உணவில் கலந்து மனித உடலில் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்தும். எனவே, செய்தித்தாள், பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை வைத்து விற்பனை செய்யக் கூடாது. இதை மீறும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பொருட்களை பச்சையான அல்லது காய்ந்த இலைகளிலோ அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டுகளிலோ வைத்து விற்பனை செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *