mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / இம்ரான்கான் மிகப்பெரிய தலைவர் என்றால் தீவிரவாதி மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாரா?

இம்ரான்கான் மிகப்பெரிய தலைவர் என்றால் தீவிரவாதி மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாரா?

March 14, 2019 1:57 pm

 

இம்ரான்கான் ஒரு மிகப்பெரிய தலைவர் என்றால் தீவிரவாதி மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியாவின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய தீர்மானத்தை கடந்த மாதம் கொண்டு வந்தன. இதையடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவின் நடவடிக்கைக்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டைப் போட்டுள்ளது. இதனிடைய புல்வாமா தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மசூத் அசாரை சீனா பாதுகாப்பதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.   டெல்லியில் தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், தீவிரவாதம் தொடர்பான விஷயத்தில் வாய்ப்பேச்சு மட்டும் போதாது என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார். இம்ரான்கான் உண்மையிலேயே சமாதானத்தை விரும்பினால், ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஒப்படைப்பதில் ஏன் தாமதிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாகிஸ்தானை பயங்கரவாத அமைப்புகள் இல்லாத நாடாக மாற்றினால் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அந்நாட்டுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

About CmsnewsAdmin@123

Check Also

லண்டனில் நீரவ் மோடி கைது

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *