mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது!

இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது!

July 15, 2019 11:02 am

சூப்பர் ஓவர் வரை சென்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை முதன்முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய 2019ஆம் ஆண்டின் உலகக் கோப்பை தொடரின் க்ளைமாக்ஸ் இங்கிலாந்துக்கே சாதகமாக முடிந்துள்ளது. கோப்பைக்கான இறுதிப் போட்டியில் (ஜூலை 14) சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணியும் 2015 உலகக் கோப்பையை நூலிழையில் நழுவவிட்ட நியூசிலாந்து அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர் ஹென்றி நிகோல்ஸ் அடித்த 55 ரன்களின் உதவியுடன் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் தரப்பில் சிறப்பாகப் பந்து வீசிய கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் நியூசிலாந்தைப் போலவே ரன் குவிக்கத் திணறியதோடு, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸும் ஜோஸ் பட்லரும் அணியை மீட்டனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. 45ஆவது ஓவரில் 59 ரன்கள் எடுத்திருந்த ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்த பிறகு போட்டி நியூசிலாந்து பக்கம் திரும்பியது. எனினும் கடைசி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ் அணியைத் தோல்வியிலிருந்து மீட்டார். கடைசி பந்தில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பென் ஸ்டோக்ஸால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் போட்டி சமநிலையானது. பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இங்கிலாந்து அணி சார்பாக ஸ்டோக்ஸும் பட்லரும் களமிறங்கினர். டிரெண்ட் போல்ட் வீசிய அந்த ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்கு 16. ஜிம்மி நீஷமும் மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீசினார். முதல் ஐந்து பந்துகளில் 14 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. முன்னர் நடந்ததைப் போலவே இந்த கடைசிப் பந்திலும் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தது. பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக் கோப்பையைக் கையிலேந்தியுள்ளது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையைப் போலவே இந்த ஆண்டும் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை நழுவவிட்டுள்ளது நியூசிலாந்து அணி. இங்கிலாந்து அணிக்காகக் கடைசி வரையில் போராடிய பென் ஸ்டோக்ஸுக்கு ஆட்ட நாயகன் விருதும், தொடரில் 578 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *