mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / ஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்

ஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்

ஆந்திராவில் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 3 லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் என்.டி.ஆர்., நகர்புற வீட்டமைப்பு திட்டம் , பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்புறம் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா -ஊரகப்பகுதி ஆகியவற்றின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரப்பட்டன.இதில் எஸ்.சி பிரிவினர் 57 ஆயிரத்து296, எஸ்.டி., பிரிவினர் 24ஆயிரத்து 332, பிசி பிரிவினர் 1 லட்சத்து43 ஆயிரத்து 5 பேர், இதரபிரிவினர் 75 ஆயிரத்து 713 பேர் என 3 லட்சம் பேருக்கு வீடு கட்டிதரப்பட்டன. 200 ச.அடி முதல் 750 ச.அடி வரையில் 3 பிரிவுகளாக வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.
ஏழைகளுக்கு வீடு வழங்கும் விழாவில் மாநில வீ்ட்டு வசதி துறை அமைச்சர் ஸ்ரீனிவாசலு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் வரும் 2022-ம் ஆண்டிற்குள் 19 லட்சம் மக்களுக்கு இலவச வீடு கட்டித்தர அரசு இலக்காக கொண்டிருப்பதாக கூறினார்.
அமைச்சர் வழங்கிய வீடுகள் அனைத்தும் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.