mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / அலுவல் மொழியாக தமிழ் நிராகரிப்பு!

அலுவல் மொழியாக தமிழ் நிராகரிப்பு!

July 25, 2019 11:11 am

உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை அலுவல் மொழியாகப் பயன்படுத்த இயலாது என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் மொழிபெயர்த்து அண்மையில் வெளியிடப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் எழத் தொடங்கியது.

இதுதொடர்பாக திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், “உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலம், இந்தி தவிர்த்து மாநில மொழிகள் அலுவல் மொழிகளாக்க எந்த மாதிரியான நடைமுறைகள் உள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாகவோ அல்லது அலுவல் மொழிகளில் ஒன்றாகவோ ஆக்க பரிந்துரை வந்திருக்கிறதா? அப்படியிருந்தால் இதுதொடர்பாக அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என்று சட்ட அமைச்சகத்துக்குக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குச் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (ஜூலை 24) எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், “பெங்காலி, தமிழ், குஜராத்தி, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளை முறையே கொல்கத்தா, சென்னை, குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர் ஆகிய உயர் நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக்க வேண்டுமென அமைச்சரவைக்குப் பரிந்துரை வந்தது. ஆனால், மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று 21.05.1965இல் மத்திய அமைச்சரவை முடிவு செய்துவிட்டது.

எனவே மாநில மொழிகள் தொடர்பான பரிந்துரையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைத்தோம். இதுதொடர்பாக விரிவான ஆலோசனை நடத்திய உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு, அதற்கு ஒப்புதல் தர முடியாது என்று 18.01.2016 அன்று நிராகரித்துவிட்டது. இந்தக் கோரிக்கையானது தலைமை நீதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *