mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / அருண் ஜெட்லி கவலைக்கிடம்!

அருண் ஜெட்லி கவலைக்கிடம்!

August 17, 2019 2:47 pm

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று பிற்பகல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தார். இரவு 11.15 மணியளவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் மருத்துவமனை சென்று உடல் நலம் விசாரித்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 66 வயதாகும் அருண் ஜெட்லி கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *