mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / அரசு சிறப்பு பொங்கல் தொகுப்பு திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்

அரசு சிறப்பு பொங்கல் தொகுப்பு திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்

January 5, 2019 4:14 pm

சென்னை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின்படி ரூ.258 கோடி செலவில் 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை தொகுப்பு பையில் போட்டு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு 1.98 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை இன்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

About CmsnewsAdmin@123

Check Also

லண்டனில் நீரவ் மோடி கைது

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *