mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / அயோத்தி ராமர் கோயில் விவகாரம் வழக்கு தொடர்ந்த 25 பேர் மத்தியஸ்தர் குழு முன் ஆஜர்

அயோத்தி ராமர் கோயில் விவகாரம் வழக்கு தொடர்ந்த 25 பேர் மத்தியஸ்தர் குழு முன் ஆஜர்

March 14, 2019 1:50 pm

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த 25 பேர் மத்தியஸ்தர் குழு முன் ஆஜராகினர்.  அயோத்தியில் உள்ள ராமர்கோயில், பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய 3 பேர் குழுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் நியமித்தது. இந்த குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம பஞ்சு மற்றும் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு சார்பில் பைசாபாத் நகர நிர்வாகம் அயோத்தி விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த 25 பேரையும் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்காக அவர்களுக்கும் அவர்களது வழக்கறிஞர்களுக்கும் தேவையான பாதுகாப்பை அளிப்பதுடன் விசாரணை நடைபெற உள்ள அவாத் பல்கலைக்கழகத்திற்கும் தீவிர பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதையொட்டி விசாரணை நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அனுஜ் குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பைசாபாத் வந்த மத்தியஸ்தர் குழு இன்று வரை விசாரணை நடத்துகின்றனர்.  இதையடுத்து வழக்கு தொடர்ந்திருந்த 25 மனுதாரர்களும் மத்தியஸ்தர் குழு முன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

About CmsnewsAdmin@123

Check Also

லண்டனில் நீரவ் மோடி கைது

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *