mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் நிரந்தரமாக முடிவுக்கு வரும்: ஈரான்!

அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் நிரந்தரமாக முடிவுக்கு வரும்: ஈரான்!

June 25, 2019 3:06 pm

ஈரானின் சுப்ரிம் தலைவர் உட்பட அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இவ்வாறு ஈரான் தலைவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதால் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் நிரந்தரமாக முடிவுக்கு வருவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அப்பாஸ் மவுசாவி தனது டிவிட்டர் பக்கத்தில், “ஈரான் சுப்ரிம் தலைவர் (அயதொல்லா அலி கமெனெய்), ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் (முகமது ஜாவத் ஷரிஃப்) மீது தேவையில்லாத பொருளாதார தடைகளை விதிப்பது தூதரக உறவுகளை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் செயலாகும். உலக அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கான சர்வதேச அமைப்புகளை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சீர்குலைத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக ஈரானின் சுப்ரிம் தலைவர் உட்பட தலைமை அதிகாரிகள் மீது அமெரிக்க அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரிஃப் மீது இந்த வாரமே பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்காவின் அதிகாரக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இடங்களில் உள்ள நிதிச் சொத்துகளை அவர்களால் பயன்படுத்த முடியாது.

ஈரான் சுப்ரிம் தலைவர் அயதொல்லா அலி கமெனெய்யாலும், அவருக்கு நெருக்கமானவர்களாலும் நிதியையும், ஆதரவையும் பெற இயலாது. எனினும், இதனால் அவருக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என தெரிகிறது. ஏனெனில், அலி கமெனெய் கடந்த 30 ஆண்டுகளாக ஈரானை விட்டு வெளிநாடுகளுக்கு எங்கும் பயணிக்கவில்லை. கடைசியாக 1989ஆம் ஆண்டில் அவர் அரசு பயணமாக சீனா சென்றுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடை மட்டுமே தூதர உறவுகள் ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத் தடை தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஈரான் உட்பட எந்த நாட்டுடனும் நாங்கள் மோத விரும்பவில்லை. ஆனால் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதாரத் தடையின் விளைவாக பல நூறு கோடி டாலர் மதிப்பிலான ஈரான் சொத்துகள் முடங்கும் என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் நுச்சின் தெரிவித்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *