mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / அபிநந்தன் படைப்பிரிவுக்கு யுனிட் சைட்டேசன் விருது!

அபிநந்தன் படைப்பிரிவுக்கு யுனிட் சைட்டேசன் விருது!

October 7, 2019 12:19 pm

பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியதற்காகவும், பாகிஸ்தான் எஃப் -16 ஜெட் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்காகவும் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனின் 51 படைக்கு (அக்டோபர் 8) கெளரவ விருது வழங்கப்படவுள்ளது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. மிக்-21 ரக விமானத்தில் சென்ற, தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார். இதன்பின் அவரது விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. இதில் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் சிக்கிக்கொண்டார். இந்தியாவின் அழுத்தம் மற்றும் சர்வதேச நாடுகளின் தலையீட்டால் அவர் விடுவிக்கப்பட்டார். சுட்டு வீழ்த்தி வீர சாகசம் புரிந்த அபிநந்தன் வர்த்தமானுக்கு 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அபிநந்தன் வர்தமன் இடம்பெற்றிருந்த 51ஆவது படைப்பிரிவுக்கு யுனிட் சைட்டேசன் எனப்படும் கெளரவ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைக் குழுவின் கேப்டன் சதீஷ் பவார் பெற்றுக்கொள்வார். ஆபரேஷன் பந்தர் என்ற பெயரில் பாலக்கோட்டில் தாக்குதல் நடத்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் இடம்பெற்றிருந்த ஒன்பதாவது படைப்பிரிவுக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை ராணுவ சிக்னல் பிரிவின் தலைவர் மின்டி அகர்வால் பெற்றுக்கொள்வார்.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *