mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம்!

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம்!

July 23, 2019 12:02 pm

வேலூர் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி 50 சதவிகித ஒப்புகைச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பான வழக்கு ஒன்றில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் வேலூர் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

(ஜூலை 22) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜூலை 18 வரை வாக்காளர் பட்டியலில் விண்ணப்பித்துப் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் வேலூர் மக்களவை தேர்தலில் வாக்களிக்கலாம். புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக ஏற்கனவே 10 கம்பெனி துணை ராணுவத்தினர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளது. 1553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 850 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ள 179 வாக்குச்சாவடிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2.38 கோடி ரூபாய் ரொக்க பணமும், 89.4லட்ச ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *