mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி!

அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி!

September 3, 2019 12:35 pm

இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து தொடர்களிலும், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்த இந்திய அணி தரப்பில் விஹாரி 111 ரன்களும் கோலி 76 ரன்களும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சொந்த மைதானத்தில் பும்ராவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் சரிந்தது. 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 168 ரன்களை சேர்த்திருந்தபோது டிக்ளேர் செய்தது. அப்போது ரஹானே 64 ரன்களுடனும், விஹாரி 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனால் 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய நான்காம் நாள் ஆட்டத் தொடக்கத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி 45 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ப்ராவோ, ப்ரோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்தனர். ப்ராவோ 23 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். ப்ரோக்ஸ் அரை சதத்தை கடந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்த நிலையில் ஆட்டத்தின் 27.5ஆவது ஓவரில் ரோஸ்டன் சேஸ் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து விளையாடிய ஹெட்மயர் (1), ப்ளாக்வுட் (38), ஜாசன் ஹோல்டர் (39), ஹெமில்டன் (0), கார்ன்வால் (1), கெமார் ரோச் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் இந்தியாவின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தனர். இதனால் அந்த அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 210 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதனால் டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் ஷமி, ஜடேஜா தலா 3 விக்கெட்களையும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்களையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டு இன்னிங்ஸிலும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய விஹாரிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த டெஸ்ட்டிலும் வெற்றி பெறுவதன் மூலம் இந்தியா, ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் 120 புள்ளிகளைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். 48 போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டுள்ள கோலி 28 போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்துள்ளார். இதற்கு முன்னதாக 60 போட்டிகளில் 27 போட்டிகளை தோனி வென்று கொடுத்ததே சாதனையாக இருந்தது.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *