mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / அடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்!

அடுத்த இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்!

August 16, 2019 1:55 pm

கபில் தேவ், அன்ஷுமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை இன்று மாலை 7 மணிக்கு ஊடகங்களில் அறிவிக்கவுள்ளது. இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் பதவி நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக வந்த விண்ணப்பத்தை பரிசீலித்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டாம் மூடி, மேற்கிந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பில் சிம்மன்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின்சிங், ரவி சாஸ்திரி உள்ளிட்ட 6 பேரை தேர்வு செய்துள்ளது. இந்த 6 பேரை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பெயரும் இந்த பதவிக்கு நேரடியாக பரிசீலிக்கப்படும்.

கபில் தேவ், அன்ஷுமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கவுள்ளது. சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தேர்வுக் குழுத் தலைவர் கபில் தேவ், தனது விருப்பமாக ரவி சாஸ்திரியின் பெயரை முன்மொழிந்துள்ளார். கபில் தேவ், “இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் வெற்றி விழுக்காடு அதிகமாக இருப்பதன் காரணமாகவும் மேலும் இந்திய அணியின் செயல்பாடு இவரது பயிற்சியின் கீழ் சிறப்பாக உள்ளது என்று நான் கருதுகிறேன். கோலிக்கும் அவருக்கும் இடையேயான உறவு இந்திய அணியை பலப்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன். இதனால் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர நான் சக உறுப்பினர்களோடு ஆலோசனை செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அவரை பயிற்சியாளராக பரிந்துரை செய்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் இன்று மும்பையில் தொடங்கியுள்ளது. நேர்காணலை நடத்துவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமையகத்திற்கு காலை வந்துள்ளார். முதல் நேர்காணலாக ராபின் சிங்குடைய நேர்காணல் தொடங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீசில் உள்ள ரவிசாஸ்திரியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை அறிவிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறது.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *