mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / அடுத்த ஆட்டத்தை தொடங்கிய சுசீந்திரன்

அடுத்த ஆட்டத்தை தொடங்கிய சுசீந்திரன்

September 7, 2019 11:49 am

சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் திரைப்படம் வெளியாகி இரு வாரங்களே ஆன நிலையில் தனது அடுத்தப் படத்திற்கான டீசரை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாகக் கொண்டு படம் இயக்கும் இயக்குநர் என்ற பெயரை சுசீந்திரன் விரைவில் பெற்றுவிட்டார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு சாம்பியன் திரைப்படம் உருவாகிறது. ஆனால் டீசரில் விளையாட்டுப் போட்டியைவிட ஆக்ஷன் காட்சிகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. சுசீந்திரன் ஏற்கெனவே இயக்கிய நான் மகான் அல்ல, பாண்டியநாடு ஆகிய படங்களைப் போல இந்தப் படமும் பழிவாங்கல் கதையை கொண்டுள்ளது. விஸ்வா இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மிருணாளி கதாநாயகியாக நடிக்கிறார். அஞ்சாதே நரேன் பயிற்சியாளராக நடிக்கிறார். கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா நடித்திருந்த நிலையில் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடிக்கிறார். பிசாசு படத்திற்கு இசையமைத்த அரோல் குரொலி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் அடுத்தமாதம் வெளியாகும் என எதிரபார்க்கப்படுகிறது.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *